ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை தொடர்வதற்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல் - 2021/2022 (விண்ணப்பம் உட்பட முழு விபரங்களும் இணைப்பு)
ஆசிரியர் கல்லூரிகளில் 2021/2022 இரு வருட கால பயிற்சி பாடநெறியை தொடர்வதற்காக உரிய தகைமைகளை கொண்ட ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- ஆசிரியர் கல்லூரிகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைய மற்றும் நியமனத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர் சேவையின் பதவி உயர்வின் போது தொழில்சார் தகைமை இன்மையினால் பாதிப்புகள் ஏற்படுவது மாத்திரமின்றி பாடசாலைக் கல்வியின் பண்புசார் தரத்தை விருத்தி செய்வதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இச்சகல விடயங்களையும் கருத்திற்கொண்டு சகல பட்டதாரி அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்கள் பயிற்சியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இம்முறை 25 பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
- நியமனம் பெற்ற பாடத்திற்கே பயிற்சி பெற வேண்டும்.
- விசேட கல்வி பாட நெறிகளுக்கு மாத்திரம் வேறு பாடங்களுக்காக நியமனம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- நியமனக் கடிதத்தில் பாடம் குறிப்பிடப்படாத ஆசிரியர்கள் தாம் உயர்தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த பாடத்திற்கு பயிற்சியை பெறலாம்.
- சாதாரண தர தகைமைகளின் அடிப்படையில் நியமனம் பெற்றவர்கள் நியமன பாடம் குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் ஆரம்பப் பிரிவு நியமனமாக அது கருதப்படும்.
- விண்ணப்ப முடிவு திகதி: 27-04-2021.
இது தொடர்பாக 28/2016 இலக்கம் கொண்ட
சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை தொடர்வதற்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல் - 2021/2022 (விண்ணப்பம் உட்பட முழு விபரங்களும் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
March 24, 2021
Rating:

No comments: