இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும்
27ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
க.பொ.த. பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்ற கோட்டே ஆனந்த பரீட்சை மண்டபத்திற்கு விஜயம் செய்த போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நன்றி தெரிவித்தார். இதற்கு சகல அதிகாரிகளும் உயர்ந்தபட்ச ஆதரவை வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சா.தர பரீட்சை (2021 மார்ச்) விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக...
Reviewed by irumbuthirai
on
March 11, 2021
Rating:
No comments: