ஹோமாகம, ஜல்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, லங்கா அசோக் லேலண்ட் (Lanka Ashok Leyland) நிறுவனத்தின் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலையில் செயற்பாடுகள் 27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்டார்.
1994 ஆம் ஆண்டு முதல் செயற்படாமல் இருந்த அசோக் லேலண்ட்
நிறுவனத்தின் ஹோமாகம, ஜல்தரயில் அமைந்துள்ள வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை அதாவது 27 வருடங்களுக்குப் பின் இவ்வாறு பணிகளை ஆரம்பித்துள்ளது.
லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் முறையே இந்தியாவுக்கு 28% மற்றும் இலங்கைக்கு 72% என்ற அடிப்படையில் உண்டு. இதில் 30% உள்நாட்டு பங்கு உரிமையாளர்களுக்கு இருப்பதுடன் மிகுதி 42% கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் லங்கா லேலண்ட் அரச நிறுவனத்திற்கும் உள்ளது.
வாகன பாகங்களை ஒனறு சேர்த்து 1994 ஆம் ஆண்டு முதல் பஸ் லொறி உட்பட வாகனங்களட இலங்கையில் தயாரிக்கப்பட்டு வந்ததுடன் இந்நாட்டில் வாகனங்களை பொருத்துவதை விட இந்தியாவிலிருந்து முழுமையாக அசோக் லேலண்ட் வாகனங்களை இறக்குமதி செய்வது இலாபகரமானதாக காணப்பட்டதால் 1994 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை தயாரிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
சமீபத்தில் கைத்தொழில் அமைச்சு வாகனங்களை தயாரித்தல், வாகனங்களை பொருத்துதல், வாகன உதிரி பாகங்களை தயரித்தல் பற்றிய ஒரு நிலையான செயல்முறையை வெளியிட்டது.
நாட்டில் பாகங்களைக் கொண்டு வாகனங்களை தயாரித்து தேசிய பெறுமதியை ஒன்று சேர்த்து வரி நிவாரணத்தை அதிகரிப்பதன் மூலம், இலங்கை அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன இறக்குமதியை வரையறுத்து, பாகங்களைக் கொண்டு வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து இந்நாட்டிலே இலாபகரமான முறையில் வாகனங்களை பொருத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச இத்தொழிற்சாலை பார்வையிட சென்றபோது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நிலையான செயல் முறையினூடாக வாகனங்களை பொருத்துதல் மற்றும் வாகன உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம், மற்றும் சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்தி, லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் எதிர்வரும் சில வருடங்களுக்குள் இலங்கையில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறையில் பட்டதாரிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவும், ஆயிரக்கணக்கான வாகனங்களை நாட்டிலேயே பொருத்துதல் மற்றும் வாகன உதிரிப் பாகங்களையும் தயாரிக்கும் மேம்படுத்துவதே தனது எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச இங்கு தெரிவித்துள்ளார்.
அதேபோல் தெற்காசிய பிராந்தியத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் வாகன ஏற்றுமதியை மேற்கொள்ளவும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பஸ், லொரி மட்டுமல்லாமல் குப்பை கொண்டு செல்லும் லொரி, நீர் பவுசர்கள், கொங்கிரீட் கலக்கும் லொரிகள் போன்ற விசேடமான வாகனங்களையும் இலங்கையில் சந்தைப்படுத்தும் தேவைப்பாடு உள்ளதாகவும் அமைச்சர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட Lanka Ashok Leyland
Reviewed by irumbuthirai
on
March 24, 2021
Rating:

No comments: