சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கொள்கலன்களுடன் புறப்பட்ட 'எவர்கிரீன்' என்ற வணிக கப்பல் சுயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால்
கட்டுப்பாட்டை இழந்த கப்பலின் முன்பக்கம்
கால்வாயின் வடக்கு பக்க சுவற்றின் மீது மோதியுள்ளது. அடுத்த கணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது. இவ்வாறு பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைப்பட்டது.
மாற்று வழியில் ஏனைய கப்பல்கள் செல்ல வேண்டுமாயின், ஆப்பிரிக்காவின் ஊடாகவே செல்ல வேண்டும். இவ்வாறு செல்வதன் மூலம் குறைந்தது 10 நாட்கள் மேலதிகமாக பயணிக்க வேண்டிவரும் அதாவது மேலதிகமாக 5,000 கடல் மைல்களை கடக்க வேண்டி ஏற்படும்.
தற்போது இந்த நிலைமை காரணமாக ஏராளமான சரக்கு கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் குவிந்து வருகின்றன. கப்பல்களின் இந்த அணிவகுப்பால் அந்தக் கடல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கொள்கலன்களில் 30% மானவை தினமும் இந்த கால்வாயின் ஊடாகவே எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சூயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய கப்பல்: 5,000 கடல் மைல்களை சுற்றும் நிலையில் ஏனைய கப்பல்கள்:
Reviewed by irumbuthirai
on
March 26, 2021
Rating:
No comments: