புதிதாக 626 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த மாதத்திற்குள்
இதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்கனவே 374 தேசிய பாடசாலைகள் உள்ளன. 1,000 தேசிய பாடசாலைகளை நிறுவும் அரசின் தேசிய செயற்றிட்டத்தின் கீழே புதிதாக 626 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன.
தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளுக்கு தேவையான கட்டடங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிதாக 626 தேசிய பாடசாலைகள்...
Reviewed by irumbuthirai
on
March 07, 2021
Rating:
No comments: