ஆரம்பமானது அரச காணிகளைப் பயன்படுத்துவோர்க்கு பத்திரம் வழங்கும் திட்டம்...


உரிய முறையில் தெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிய உரிமைப் பத்திரங்களை வழங்கும் வைபவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது. 
இத்திட்டத்தின் கீழ் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதன் முதல் கட்டத்தின் கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 
சட்டபூர்வமாக தெரிவுசெய்யப்பட்ட 20,000 பேருக்கு உரிமை பத்திரங்கள் வழங்கப்படும். 
இந்த உரிமைப் பத்திரங்களை பெறுபவர்கள் வீடொன்றை கட்ட, விவசாய நோக்கங்களுக்காக மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தங்கள் காணிகளை பயன்படுத்தலாம். இந்த பத்திரத்தை பிணையமாக வைத்து வங்கிக் கடனொன்றை பெற்றுக்கொள்ளவும் பயனாளிகளுக்கு உரிமை உண்டு. 
இந்த வருட (2021) இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இந்நிகழ்வின்போது தெரிவித்தார்.
ஆரம்பமானது அரச காணிகளைப் பயன்படுத்துவோர்க்கு பத்திரம் வழங்கும் திட்டம்... ஆரம்பமானது அரச காணிகளைப் பயன்படுத்துவோர்க்கு பத்திரம் வழங்கும் திட்டம்... Reviewed by irumbuthirai on March 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.