இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக டிஜிட்டல் முறையில் அதாவது QR குறியீட்டுடனான முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று (16) ஊடக அமைச்சில் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இடம்பெற்றது.
இதற்கமைவாக 25 ரூபா பெறுமதியுடைய முத்திரையொன்று QR குறியீட்டுடன் நேற்று வெளியிடப்பட்டது. இந்த QR குறியீட்டு முத்திரை தொடர்பாக
மேலதிக தகவல்களை பெறுவதற்கு அதன் QR குறியீட்டை ஸ்கேன் செய்து முத்திரை திணைக்களத்தின் இலங்கை தபால் இணையதளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.
இதேவேளை பாதுகாப்பு அடையாளத்துடன் கூடிய ரூ. 500 பெறுமதியுள்ள புதிய தபால் முத்திரையொன்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் இங்கு வெளியிடப்பட்டது.
இந்த முத்திரையில் ஒரு பாதுகாப்பு குறியீடு மறைந்திருப்பதாகவும், எவரேனும் ஒருவர் அதனை முறைகேடாக பயன்படுத்துபவார்களாயின் அது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க இதன்போது தெரிவித்தார்.
எமது நாட்டு வரலாற்றில் முதலாவது முத்திரை
1857ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வெளியிடப்பட்டது. அத்துடன் இலங்கை தபால் திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏராளமான நினைவு முத்திரைகளை வெளியிட்டுள்ளது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக புதிய முறையில் வெளியிடப்பட்ட முத்திரை
Reviewed by irumbuthirai
on
March 17, 2021
Rating:
No comments: