தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு


கோவிட் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் ஏற்பட்டால், அவர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெராத் கூறுகிறார். 
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் இதுவரை இங்கு இறந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். 
பொதுவாக இரண்டு நாட்களுக்குள் இந்த காய்ச்சல் குறையும். அதன்பின்னரும் காய்ச்சல் இருந்தால் 
அதை அலட்சியப்படுத்த வேண்டாம். விரைவாக சிகிச்சைக்கு செல்லுங்கள். ஏனெனில் அது டெங்கு நோயாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.