அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் செனட் சபை தோ்தலில், ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹஃபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்க வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுஃப் ரஸா கிலானி தோல்வியடையச் செய்தார்.
இந்த நிகழ்வு, பிரதமா் இம்ரான் கானுக்கு (Imran Khan) பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் பிரதமா் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கின.
இதன்காரணமாக தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக தொலைக்காட்சி வழியாக
நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது
இம்ரான் கான் அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று காலை பாகிஸ்தானின் தேசிய அவை கூடியது. இதன்போது நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன. 342 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையில் 178 வாக்குகளை பெற்று தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை இம்ரான் கான் வௌிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளார்.
மயிரிழையில் தப்பிய இம்ரான் கான் அரசு
Reviewed by irumbuthirai
on
March 07, 2021
Rating:
No comments: