இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்...


உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் நேற்று முதல் மார்ச் 14-ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
இலங்கையில் 83% மான மரணங்கள் தொற்றா நோயால் ஏற்படுகின்றன. அவற்றில் 34% மானவை 
இருதய மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களினால் ஏற்படுகின்றன. அதாவது, இந்த மரணங்கள் இருதயநோய், பக்கவாதம், அதி உயர் குருதி அழுத்தம் போன்றவற்றினால் இடம்பெறுகின்றன. 
 இவற்றுள் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், அதி உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம், உணவில் அதிகமாக உப்பை பயன் பயன்படுத்துவதாகும். 
ஒருவர் நாளொன்றிற்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என்பதாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இலங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 9 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை பயன்படுத்துகின்றனர். 
இதேவேளை உப்பு பாவனையைக் குறைப்பதனால் ஒரு ஆண்டில் உலகில் ஏற்படுகின்ற மரணங்களில், 2.5 மில்லியன் மரணங்களை குறைக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்... இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்... Reviewed by irumbuthirai on March 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.