சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான
www.slwpc.org என்ற தளம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (09) தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு பாராளுமன்ற குழு அறை 01 இல் நடைபெற்றது.
அதில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கான இணையத்தளம் ஆரம்பம்...
Reviewed by irumbuthirai
on
March 10, 2021
Rating:
No comments: