தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளை (Smart Phones) பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 2ம் இடத்தை அடைந்துள்ளது.
சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில்படி நாட்டில்
60% னோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
69 வீதமானோர் பயன்படுத்தும் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. நேபாளத்தில் 53%மும் பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட்போன் பாதிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென்னாசியாவில் குறைந்தளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகிறது. அங்கு 41 வீதமானேரே ஸ்மார்ட்போன்களை பாவிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Smart Phones பாவிப்பதில் இலங்கைக்கு கிடைத்த இடம்...
Reviewed by irumbuthirai
on
April 01, 2021
Rating:
No comments: