கிழக்கு மாகாணத்திற்குரிய வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இம்மாதம் 19ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது தற்போது அடுத்த மாதம் (மே மாதம்) 17ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர் எம் டி அப்துல் நிசாம் தெரிவிக்கையில்,
தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் கிடைத்த ஆசிரியர்கள் தற்போது நோன்பு கால விடுமுறை என்பதனால் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையேற்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. அதேபோல் தமிழ் பாடசாலைகளுக்கு இடமாற்றம் கிடைத்த ஆசிரியர்களுக்கு அவர்களது நோன்பு கால விடுமுறையை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
எனவே இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டே எதிர்வரும் மே 17ஆம் திகதி முதல் இந்த இடமாற்றங்களை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
மே 17 வரை பிற்போடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம்
Reviewed by irumbuthirai
on
April 19, 2021
Rating:
No comments: