கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு:


தமிழ் சிங்களப் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
அதில், கல்வி அமைச்சால் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை முறையாக பின்பற்றும்படியும் சுகாதாரத் தரப்பின் ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறும் கூறப்பட்டுள்ளது. 
உலகம் பூராவும் கொரோனா 3வது அலைக்கான அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் நாட்டில் 
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையையும் கருத்தில் கொண்டு செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி ஒரு வகுப்பில் 15 மாணவர்களை விட குறைவாக இருப்பின் முழுமையாகவும் 16-30 வரையான மாணவர்கள் இருப்பின் இரு குழுக்களாகவும் 30ற்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் 3 குழுக்களாகவும் வகுப்புக்களை நடாத்துமாறும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு: கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு:  Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.