யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம்


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள், இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள், வெளிநாட்டவர்களாக இருக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத 
பிள்ளைகள் மற்றும் விமானம் மூலம் வருகை தரும் இலங்கை மாலுமிகள் ஆகியோர் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றின் முன் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு அமைச்சு நேற்று(6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் பயணிகளின் வருகையை நிர்வகிக்கும் பொறுப்பு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் தனிமைப்படுத்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்கும் வகையில் குறித்த அதிகாரசபை உரிய விமான நிறுவனங்களினூடாக வருகை தருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம் யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம் Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.