180 நாடுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான ஊடக சுதந்திரத்திற்காக இலங்கைக்கு தெற்காசியாவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
தெற்காசியாவில் முதலிடத்தில் நேபாளம் இருக்கின்றது. இலங்கைக்கு அடுத்த இடங்களில் முறையே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் உலகளாவியரீதியில் இலங்கை 127வது இடத்தில் காணப்படுகிறது. நேபாளம் 106 வது இடத்தில் உள்ளது.
முழுமையாக ஊடக சுதந்திரம் உள்ள நாடுகளில் நோர்வே, பின்லாந்து, சுவீடன், டென்மார்க், கோஸ்டாரிகா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலில் சீனா 177 வது இடத்திலும் வடகொரியா 179 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசியாவில் இலங்கைக்கு இரண்டாமிடம்...
Reviewed by irumbuthirai
on
April 21, 2021
Rating:
No comments: