1) நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்:பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/மருத்துவ உதவி & ஆடை வடிவமைப்பு கற்கை நெறி தவிர்ந்தவை) அனைத்து பட்டப்படிப்பு (Undergraduate) கற்கைநெறிகளை இந்தத் திட்டம் உள்ளடக்குகின்றது.
2) ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டம்: B.E அல்லது B.Tech பட்டப் படிப்புகளுக்கு வழிசமைக்கும் ‘தகவல் தொழில்நுட்பத் துறைகளிலான பட்டப்படிப்புக் கற்கைநெறிகள்.
3) மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/துணைமருத்துவம் & ஆடை வடிவமைப்பு கற்கைநெறி தவிர்ந்தவை) முதுமாணிப் பட்டக் (Masters Degrees) கற்கைகளை உள்ளடக்குகிறது. எவ்வாறாயினும், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4) பொதுநலவாய புலமைப் பரிசில் திட்டம்: மருத்துவம்/ துணைமருத்துவம் & ஆடை வடிவமைப்புக் கற்கை நெறிகள் தவிர்த்து அனைத்துத் துறைகளின் கலாநிதிப் பட்டப் படிப்புக்கள் (PhD Degrees),
மேற்படி கற்கை நெறிகள் 2021 மே 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னைய இறுதி திகதியான 2021 ஏப்ரல் 20 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் புதிய இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.
தேவையான தகவல்களை உயர் கல்வி அமைச்சின் www.mohe.gov.lk எனும் இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் உயர் கல்வி அமைச்சு அல்லது இந்திய உயர் ஸ்தானிகராலயம் - கொழும்பு ஆகியவற்றை அணுக முடியும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
23 ஏப்ரல் 2021
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
இந்திய புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!
Reviewed by irumbuthirai
on
April 25, 2021
Rating:
No comments: