சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாகவும் அதிக பாதுகாப்பை வழங்கவில்லை எனவும் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் காவ் ஃபூ தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரை சீனா 04 கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அதை
பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த தடுப்பூசிகளை வெளிநாட்டில் பரிசோதனை செய்த போது, சில பரிசோதனைகளில் அதன் செயல் திறன் 50% வரை குறைவாக உள்ளது தெரியவந்தது.
இதேவேளை கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பல தடுப்பூசிகளை சேர்த்து பயன்படுத்த சீனா ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இத்தனை விவரங்களைக் கூறிய பிறகு, தான் கூறிய கருத்துகளிலிருந்து பின்வாங்கிய காவ் ஃபூ, "உலகம் பூராகவும் தடுப்பூசிகளின் செயல்திறன் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் இருந்திருக்கின்றன" என்று அரச ஊடகத்திற்கு செவ்வி வழங்கியுள்ளார்.
தான் கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.
சீனாவின் தடுப்பூசிகளில் ஒன்றான சினோவேக் ஐ பிரேசிலில் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதன் செயல்திறன் 50.4% ஆகவே காட்டியது.
இதேவேளை இலங்கையும் கொரோனா தடுப்பூசிகளை சீனாவிலிருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தடுப்பூசிகள் சிறப்பாக இல்லை: முதன்முதலாக ஒப்புக்கொண்டது சீனா:
Reviewed by irumbuthirai
on
April 12, 2021
Rating:
No comments: