இலங்கையும் பல்வேறு நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை பெற்றாலும் இன்னும் பற்றாக்குறையாகவே உள்ளது.
இந்நிலையில் கொழும்பு, பொரளை பிரதேச வீடொன்றில் அஸ்ரா செனகா கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி,
குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி உள்நாட்டவர்களுக்கு ரூபா. 1000 - 25000 வரையிலும் வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்!
Reviewed by irumbuthirai
on
May 29, 2021
Rating:
No comments: