அதாவது கொரோனா வைரஸ் எப்படி உருவானது? வுஹான் ஆய்வுகூடத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா? என்று கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுவும் 90 நாட்களுக்குள்
அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார்.
இதற்காக தங்களுடைய முயற்சிகளை இரட்டிபாக்கி பணியாற்றுங்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிபராக பதவி ஏற்றவுடனேயே இதுதொடர்பாக அறிக்கை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை தற்போது அவருக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே தற்போது கூடுதலாக விரிவான அறிக்கையை 90 நாட்களுக்குள் அதிபர் கோரியுள்ளார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள அறிக்கைகளில், சில புலனாய்வு அமைப்புகள் வைரஸானது விலங்கிடம் இருந்து பரவியது என்ற
நிலைப்பாட்டிலும் இன்னும் சில புலனாய்வு அமைப்புகள் வைரஸானது ஆய்வு கூடத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளன. ஆனால் இரண்டிற்கும் உறுதியான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.
எனவேதான் தற்போது மீண்டும் விரிவான விசாரணை ஒன்றுக்கு அதுவும் 90 நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளில் வைரஸிற்கும் ஆய்வுகூடத்திற்கும் தொடர்பு உள்ளது என்று நிரூபிக்கப்பட்டால் அமெரிக்கா - சீனா உறவு மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி! வெளியாகுமா கொரோனாவின் மர்மம்?
Reviewed by irumbuthirai
on
May 27, 2021
Rating:
No comments: