தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா?


கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
அதில் தடுப்பூசியை பெறுவதற்காக பொதுமக்கள் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற செய்தியும் பரவுகிறது. 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் அவர்கள், 
தடுப்பூசிக்காக மக்கள் தம்மை முன்பதிவு செய்து கொள்ளும் எந்த ஒரு நடைமுறையையும் சுகாதார அமைச்சு பின்பற்றவில்லை என தெரிவித்தார். மக்கள் தமக்கு கிடைக்கும் வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளின் அடிப்படையில் செயல்பட வேண்டியதில்லை. சுகாதார அமைச்சு மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமையவே மக்கள் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா? தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.