2020/2021ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக் கைநூலொன்றை, பின்வரும் முறைகளில் 21.05.2021 ஆம் திகதியிலிருந்து ஒரு கைநூலிற்காக ரூபா. 500/- செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
(1) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயலகத்தில் பெறலாம் (முகவரி: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் செயலகம், இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07.
(2) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விநியோக முகவர்களிடமிருந்து (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள விநியோக முகவர்களின் பட்டியல் UGC இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.)
(3) தலா ரூபா 500/- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கணக்கில் வைப்பில் இட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலிருந்து (www.ugc.ac.lk) பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலின் மென்நகலினை (Soft Copy) பதிவிறக்கம் செய்யலாம். (கணக்கிலக்கம் போன்ற விபரங்கள் 5வது படிமுறையில் விளக்கமாக தரப்பட்டுள்ளது)
(4) பின்வரும் பல்கலைக்கழக நலன்புரிப் பிரிவுகளிலிருந்து பெறலாம்:
i. கொழும்புப் பல்கலைக்கழகம்
ii. பேராதனைப் பல்கலைக்கழகம்
iii. ஸ்ரீ ஜயவர்த்தனபுர
பல்கலைக்கழகம்
iv. களனிப் பல்கலைக்கழகம்
v. மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
vi. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
vii. உறுகுணைப் பல்கலைக்கழகம்
viii. கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை
ix. இலங்கைத் தென் கிழக்குப்
பல்கலைக்கழகம்
x. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம்
xi. இலங்கை சப்ரகமுவ. பல்கலைக்கழகம்
xii. இலங்கை வயம்ப. பல்கலைக்கழகம்
xiii. இலங்கை ஊவா வெல்லஸ்ஸ
பல்கலைக்கழகம்
xiv. கட்புல அரங்கேற்றக்கலைப்
பல்கலைக்கழகம்
xv. இலங்கை கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்
(5) பல்கலைக்கழக அனுமதிக் கைநூலினை தபால் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்காக வேண்டி இலங்கை வங்கியின் ரொறிங்ரன் கிளையிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திரட்டுக் கணக்கு இலக்கம் 0002323287 இன் அல்லது மக்கள் வங்கியின் நகர மண்டபக் கிளையிலுள்ள திரட்டுக் கணக்கு இலக்கம் 167-1-001-4-3169407 இற்கு வரவு வைக்கும் விதமாக, இலங்கை வங்கியின் அல்லது மக்கள் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் ஒவ்வொரு கைநூலுக்கும் ரூபா 500/- இனைச் செலுத்தி பெற்றுக்கொண்ட கொடுப்பனவு பட்டோலை, அனுமதிக் கைநூலிற்கான எழுத்து மூல வேண்டுகோளுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேலும், குறித்த பணத்தை செலுத்தியமைக்கான வங்கியின் இலச்சினை பொறிக்கப்பட்டு அதிகாரமுடைய அலுவலர் ஒருவரினால் கொடுப்பனவு பட்டோலையில் முறையாக ஒப்பமிடப்பட்டிருக்கவும் வேண்டும்.
அவ்வாறு வங்கிக் கொடுப்பனவுப் பட்டோலையை அனுப்பி அனுமதிக் கைநூலினை தபால் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் போது விண்ணப்பதாரியின் பெயர் மற்றும் விண்ணப்பதாரி பெற விரும்பும் அனுமதிக் கைநூலின் ஊடகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சுய முகவரியிடப்பட்டதும், முத்திரை ஒட்டப்படாததுமான
37செ.மீ x 26செ.மீ அளவுக்குக் குறையாத கடிதவுறையொன்றுடன் எழுத்து மூல கோரிக்கையொன்றினை சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பல்கலைக்கழக அனுமதிகள்), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரிக்கு விண்ணப்பதாரி அனுப்பி வைத்தல் வேண்டும்.'
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டப்பயில் நெறிகளுக்கான அனுமதி - கல்வியாண்டு 2020/2021' எனத் தலைப்பிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலுடன் (37செ.மீ. X 26செ.மீ.) கடிதவுறை ஒன்றும் தரப்படும் என்பதும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
இணையவழி விண்ணப்பச் செயன்முறையின் இறுதியில் விண்ணப்பதாரி பெற்றுக்கொள்ளும் இணையவழி விண்ணப்பத்தின் அச்சுப்பிரதியை முறையாக நிரப்பிக் கையொப்பமிட்டு அனுப்புவதற்காக இக் கடிதவுறையை விண்ணப்பதாரிகள் உபயோகிக்க வேண்டும். பரீட்சார்த்திகள் கைநூலை வாங்கும்போது மேற்கூறப்பட்ட கடிதவுறை தமக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
(Source: பத்திரிகை விளம்பரம் -தினகரன்)
பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கையேட்டினை பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ!
Reviewed by irumbuthirai
on
May 21, 2021
Rating:
No comments: