கொழும்பு துறைமுக நகர (Port City)பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அந்த வகையில் குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதாகவும் அதற்கு சர்வசன வாக்கெடுப்பும் விசேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.
62 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டோ, புவனெக அலுவிகார மற்றும் ஜனக் த சில்வா ஆகியோரினால் வழங்கப்படுள்ளது.
வெளியானது Port City தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு: சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லுமா இலங்கை?
Reviewed by irumbuthirai
on
May 18, 2021
Rating:
No comments: