கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO!


வைரஸானது அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்ளும். அந்தவகையில் கொரோனவைரஸ் கண்டறியப்பட்டது முதல் இதுவரை பல தடவைகள் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. 
அதன் அடிப்படையில் பல நாடுகளில் இதன் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டு அவை வேகமாக பரவுவதோடு இழப்புக்களையும் அதிக அளவில் ஏற்படுத்துகின்றன. 
தற்போது இந்தத் திரிபுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) புதிய பெயர்களை அறிவித்துள்ளது. இந்தப் பெயர்கள் 
கிரேக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளன. 
அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு அல்பா (Alpha) எனவும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு பீட்டா (Beta) எனவும் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு டெல்டா (Delta) எனவும் பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை கGம்மா (Gamma) எனவும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு எப்சிலன் (Epsilon) எனவும் பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட திரிபு ´தீட்டா (Theta) எனவும் இந்தியாவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட திரிபு கப்பா (Kappa) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய பெயர்கள் தொடர்பான பட்டியலை கீழே காணலாம். 
• Kent / B.1.1.7 - Alpha 
• South Africa / B.1.351 - Beta 
• Brazil / P.1 - Gamma 
• India / B.1.617.2 - Delta 
• US / B.1.427 / B.1.429 - Epsilon 
• Brazil / P.2 - Zeta 
• B.1.525 - Eta 
• Philippines / P.3 - Theta 
• US / B.1.526 - Iota 
• India / B.1.617.1 - Kappa 
இதன் விஞ்ஞான ரீதியான பெயர்கள் புழக்கத்திற்கு மிகவும் கடினம் என்பதனால் இந்தப் புதிய பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO! கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.