கடந்த மார்ச் 23 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாஹு கட்சி 30 இடங்களையே கைப்பற்றியது. அவரால் கூட்டணி அரசைக் கூட அமைக்க முடியவில்லை.
இதனிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் சுழற்சி முறையில் பிரதமர் பதவி வழங்கப்படுமெனவும் முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட் பிரதமர் பதவியை ஏற்பார் எனவும்
யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார்.
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாய்,
அரபு எம்பிக்களின் ஆதரவு பெற்ற தீவிர வலது மற்றும் இடது கொள்கைகள் கொண்ட பல கட்சிகள் ஒன்றாக சேர்ந்த `மாற்று ஆட்சி`யை உருவாக்கியது விஷேட அம்சமாகும்.
அந்தவகையில் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நப்தாலி பென்னட் வெற்றி பெற்று பிரதமராக தெரிவானார். அவரது அமைச்சரவையில் 27 பேர். அதில் 9 பெண்கள்.
Naftali Bennett எதிர்வரும் 2023 செப்டெம்பர் வரை இஸ்ரேலின் பிரதமராக செயற்படவுள்ளதோடு அதன்பின்னர் 02 ஆண்டுகளுக்கான பிரதமர் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் யயர் லபிட்டிடம் (Yair Lapid) ஏற்கவுள்ளார்.
இதேவேளை புதிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்! முடிவுக்கு வந்த 12 வருட ஆட்சியும் புது முறையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கமும்:
Reviewed by irumbuthirai
on
June 15, 2021
Rating:
No comments: