மென்பொருள் விஞ்ஞானியாக வர வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே தனது கல்வியைத் தொடர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன், வாட்ஸ் எப் (WhatsApp) மற்றும் வைபர் (Viber) ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
mSQUAD என்ற பெயருடைய இந்த செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை
சிறப்பாகப் பயன்படுத்தி வீட்டில் இருந்தே இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.
படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளை இதனூடாக பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன் இந்த App மிகவும் விரைவு தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
60 MB அளவு மெகாபைட் கொண்ட இந்த மென்பொருளினை இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Join our WhatsApp groups:
Join our Telegram channel:
Like our FB page:
15 வயது இலங்கை மாணவனின் சாதனை! WhatsApp மற்றும் Viber க்கு நிகரான புதிய கண்டுபிடிப்பு:
Reviewed by irumbuthirai
on
June 30, 2021
Rating:
No comments: