கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர்


X-Press கப்பலின் தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
ஏற்கனவே நாங்கள் நாடு முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்களின், பெரிய குவியல்களை சேகரித்திருக்கிறோம். இதில் எத்தனை மில்லியன் துகள்களை 
மீன்கள் சாப்பிட்டுள்ளன என்பது தெரியாது. இச்சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது. ஒவ்வொரு வருடமும் நாட்டிற்கு எவ்வளவு அதிகமான பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை நாம் இப்போது கற்பனை செய்து கொள்ளலாம். 10% க்கும் குறைவான பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு மீதமுள்ளவை சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன. எனவே இந்த கப்பலால் ஏற்பட்ட சேதம், ஈடு செய்யப்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர் கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர்  Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.