கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒட்சிசனின் தேவை அதிகரித்து வருவதால், லிற்றோ கேஸ் நிறுவனம் கெரவலப்பிட்டியில் 25 ஏக்கர் காணியில்
ஒட்சிசன் தொழிற்சாலையை நிர்மாணிக்கவுள்ளது.
தற்போதைய நிலையில் தேவையான 90 மெட்ரிக் தொன் ஒட்சிசனை, அதனை வழங்கும் நிறுவனங்களால் ஈடு செய்ய முடிகிறது. எவ்வாறாயினும், பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை வழங்கியமைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்குரிய காணியை வாங்குவதற்கான ஒப்பந்தம் லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் காணி மேம்பாட்டுக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு இடையே நேற்று (02) திகதி கைச்சாடப்பட்டது.
கொரோனா பரவல்: 25 ஏக்கரில் ஒட்சிசன் தொழிற்சாலை!
Reviewed by irumbuthirai
on
June 03, 2021
Rating:
No comments: