கைவிடப்பட்ட பஸ்களை கடலில் இறக்கும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நேற்று (11) இடம்பெற்றது.
செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின்
இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம்,
கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் குறித்த செயற்றிட்டம் இடம்பெறுகிறது.
இதன் முதற்கட்டமாக 30 பஸ்கள் கடலில் இறக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சயுரு கப்பலின் மூலம் பஸ்கள் ஏற்றிச்செல்லப்பட்டு கடலில் இறக்கப்பட்டன.
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைகளுக்கு நிகரான சூழலை செயற்கையான முறையில் உருவாக்கும் நோக்கிலேயே கடற்றொழில் அமைச்சினால் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடலில் இறக்கப்பட்டன கைவிடப்பட்ட பஸ்கள்: காரணம் இதுதான்!
Reviewed by irumbuthirai
on
June 12, 2021
Rating:
No comments: