கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பாடசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தபோது அவரை வரவேற்க பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்கள் கூட்டத்திலிருந்த டேமியன் தாரெல் என்கிற இளைஞன் ஜனாதிபதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதையடுத்து குறித்த இளைஞரையும் இதை செல்போனில் படம் பிடித்த நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அதிபரை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும்
தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்ததாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள், அதில் 14 மாதங்களை இரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அந்த வகையில் அவருக்கு தற்போது 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த இளைஞர் தனது கன்னத்தில் அறைந்த விடயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என கூறிய மெக்ரோன், தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை:
Reviewed by irumbuthirai
on
June 13, 2021
Rating:
No comments: