முதன்முறையாக இந்திய டெல்டா திரிபு தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம்! அல்பாவை விட இரு மடங்கு வேகம்!!
தற்போது நாட்டில் நிலவும் B.1.1.7 அல்பா வகை திரிபை விட இருமடங்கு வேகமாக பரவக்கூடிய இந்திய திரிபான G.1.617.2 டெல்டா வகை வைரஸ் தொற்றைக் கொண்ட 05 பேர் கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு இது கட்டுப்படியாகாது. தற்போது ஒரு டோஸ் மாத்திரம்
Covid-19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு இத்திரிபிற்கு எதிரான நோயெதிர்ப்பு சுமார் 33% (1/3) அளவே காணப்படும். ஆனால் இது போதுமானதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த இந்திய திரிபு (டெல்டா) தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த இருவருக்கே இது அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
முதன்முறையாக இந்திய டெல்டா திரிபு தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம்! அல்பாவை விட இரு மடங்கு வேகம்!!
Reviewed by irumbuthirai
on
June 18, 2021
Rating:
No comments: