பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் (11) சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில்
நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார சேவைகளை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐந்து மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுமார் 35 சங்கங்கள் பங்குபற்றின.
இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் உட்பட பல சுகாதார சேவைகள் நேற்றைய தினம் பாதிப்படைந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என்றும் வைத்தியர்களுக்கு மாத்திரம் 78% விசேட கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு எந்தவொரு அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதன்போது தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன.
மேலும் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்கவில்லையாயின் நாடு தழுவிய ரீதியில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிவரும் எனவும் குறித்த தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தன.
ஆட்டம்கண்டது இலங்கையின் சுகாதாரத்துறை! விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!!
Reviewed by irumbuthirai
on
June 12, 2021
Rating:
No comments: