பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்:


09.08.2021 முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே படித்த ஒருவர் அதற்கு உபவேந்தராக வரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இது மாத்திரமன்றி 43 வயதான றமீஸ் அபூபக்கர் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் 3வது பிள்ளையாவார். 
இவர் கடந்து வந்த முக்கிய தடங்கள் வருமாறு:
2005- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைந்தார். 
2006- சமூகவியல் துறை நிரந்தர விரிவுரையாளராக நியமனம். 
2010- சமூகவியல் முதுதத்துவமானி பட்டம் (பேராதனைப் பல்கலைக்கழகம்) 
2010- முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின் படிப்பு (இங்கிலாந்து பிரட்போர்டு பல்கலைக்கழகம்) 
2011- சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 2 பதவி உயர்வு. 
2017- சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1க்கு பதவி உயர்வு. 
2017- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் முதலாவது தலைவராக நியமனம். 
2019- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு. 
2019- தென் கிழக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருடத்திற்கான சிறந்த ஆய்வாளர் விருது. 
2019- கெய்சிட் எனப்படும் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாசனை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தை பெறல். 
இது மாத்திரமன்றி இவர் கலாநிதி பட்டத்தை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்: பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.