கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன.
வெளிநாடு செல்லும் பயணிகள் கொரோனா பாதிப்பில்லா சான்றிதழை தங்களுடன் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு பயணிகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருபவர்களுக்கு பல நாடுகள் முன்னுரிமை அளித்து வருகின்றன.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் (Covid 19 Immune Passport) வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடைமுறை அடுத்த மாதம் (ஜுலை) முதல் அமுலுக்கு வரும் என ஜப்பானிய அரசின் செய்தி தொடர்பு அதிகாரி கத்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.
அறிமுகமாகிறது தடுப்பூசி பாஸ்போர்ட்!
Reviewed by irumbuthirai
on
June 18, 2021
Rating:
No comments: