வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது!


கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நபர்களை குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் போலி டாக்டர் மற்றும் அவருக்கு உதவி வழங்கிய நபரும் கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபொல பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 
இவர்கள் முகநூலில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணப்படுத்துவதற்கு தங்களால் முடியுமென்று பதிவேற்றியுள்ளதுடன், அதனூடாக தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடமே இவ்வாறு பண மோசடிகளை செய்துள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்காக தம்மை தொடர்புகொள்பவர்களது 
வீடுகளுக்கே சென்றுள்ளனர். சிகிச்சைக்காக ஒருவரிடமிருந்து தலா 12,000 ரூபா வரை அறவிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து பல வகையான மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது! வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.