கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை:


கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்கு பிறகு மற்றுமொரு வகையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிக்கள் யாருடைய உடலில் தன்னிச்சையாக உருவாகவில்லையோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை கொடுக்க முடியும். ஆனால் இந்த சிகிச்சை முறை தடுப்பூசியை விட செலவு அதிகமானது. 
ரீஜெனரான் என்ற மருந்து நிறுவனம் மோனோகுளோனல் ஆன்டிபாடி என்று அழைக்கப்படும் சிகிச்சை முறையை இதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிகிச்சை முறை காரணமாக 
கொரோனா வைரஸ்களால் மனித உடலில் இருக்கும் மற்ற செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. இந்த சிகிச்சை முறையால் 100 நோயாளிகளில் 06 பேரின் உயிரைக் காப்பாற்றலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்கள் இறக்கும் அபாயத்தை மூன்றில் ஒரு பங்கு வரை குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது. 
மேலும் இதுதொடர்பான பரிசோதனையின் இணை முதன்மை ஆய்வாளரான சர் மார்டின் லாண்ட்ரே கூறுகையில், 
10,000 பிரிட்டன் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த சிகிச்சை முறை பரிசோதனையில், மரண அபாயத்தை கணிசமாக குறைத்திருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் சராசரியாக 04 நாட்களைக் குறைத்திருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படுவதைக் குறைத்திருக்கிறது என்று கூறினார்.
கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை: கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை: Reviewed by irumbuthirai on June 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.