சீனாவின் சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டத்தினால் அந்நாட்டு சனத்தொகையில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.
பின்னர் 2016 இல் அரசு சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததோடு ஒரு தம்பதி இரு குழந்தைகளை பெறுவதற்கு அனுமதி அளித்தது.
ஆனால் தற்போது ஒரு தம்பதியினர் 03 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அண்மைய சனத்தொகை கணக்கெடுப்பின் போது சீனாவின் சனத்தொகை வளர்ச்சியானது
மிகவும் மந்தமாக இருப்பது தெரியவந்தது. இதேவேளை கடந்த ஆண்டில் சுமார் 12 மில்லியன் குழந்தைகள் மாத்திரமே பிறந்துள்ளன. 1960களின் பின்னர் உள்ள மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையாகவும் இது இருந்தது.
இந்த நிலைமையின் பின்னரே அரசு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனா இந்தத் தீர்மானத்திற்கு வர காரணம், நாட்டில் இளம் வயதினர் குறைந்து முதியோர்கள் அதிகரித்தால், எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க தேவையான பணியாளர்கள் இல்லாமல், நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அளவில் தேவை ஏற்படும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருந்தமையே காரணம் எனக் கூறப்படுகிறது.
மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்தமைக்கான காரணம் இதுதான்...
Reviewed by irumbuthirai
on
June 02, 2021
Rating:
No comments: