செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில்.


கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஒரு வருடத்திற்கும் அதிகமான இடைவௌிக்கு பின்னர் இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நிரப்பப்பட்டது. 
05 தடவைகள் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ள ரணில் விக்ரமசிங்க, 1977 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார். நான்கு தசாப்தங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர். இலங்கை வரலாற்றில் நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல்வாதியாவார். 
இவர் தனது கன்னி உரையில், 
 அரசாங்கம் செல்வந்தர்களுக்கு நிவாரணங்களையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுத்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார். கொரோனா, எரிபொருள், கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகள் நாட்டில் உள்ளன. மாற்றுத் திட்டம் இல்லாமல் தரவுகள் குறித்து கதைப்பதில் பலனில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் ஈடுபடுவதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு இருக்கும் ஒரே வழி என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில். செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில்.  Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.