இந்தியாவில் உருமாற்றம் அடைந்து உருவான கொரோனா வைரஸ் திரிபே ‘டெல்டா' எனப்படுகிறது. 2வது அலையில் பல இலட்சம் பேரை இது கொன்றுள்ளது. இந்த வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து, அதை விட வீரியமிக்கதாக உருவாகி தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, ‘டெல்டா பிளஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் மரணமான பெண்ணின் மீது நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் அவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே டெல்டா ப்ளஸ் காரணமாக இடம்பெற்ற முதலாவது மரணமாக இது பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு:
Reviewed by irumbuthirai
on
June 26, 2021
Rating:
No comments: