இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா?


இலங்கையிலுள்ள வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. இதற்காக கொஸ்லந்தை பிரதேசத்திலமைந்துள்ள வெளவால் குகையை அடிப்படையாக கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வுக்குழு உறுப்பினரான கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனத்தின் பேராசிரியரான தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார். 
இந்த ஆராய்ச்சியின்போது மனிதர்களுக்கு பரவும் எல்பா மற்றும் பீட்டா ஆகிய கொவிட்19 மாறுபாடுகள் கொண்ட 
இரண்டு வகை விசேட வெளவால்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட எல்பா மற்றும் பீட்டா கொவிட்19 வைரஸ் மாறுபாடு தற்போது பல நாடுகளில் பரவும் பிரிட்டன் எல்பா அல்லது தென்னாப்பிரிக்காவின் பீட்டாவின் துணை வகைகள் அல்ல. ஆனால் இவை கொவிட்19 வைரஸின் நான்கு முதன்மை மாறுபாடுகளில் இரண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மாறுபாடுகள் மனிதர்களின் உடலில் பரவி கொவிட் 19 வைரஸ் வரை கொண்டு செல்லுமா? என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் மக்கள் வௌவால்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாமென பேராசிரியர் தேஜானி பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.