உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு


1,098 காரட் அளவுடன் 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் பருமன் கொண்டுள்ள உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அது 3,106 காரட் அளவுடையதாகும். 
 2017 இல் இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அது 1,109 காரட் அளவுடையது. 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபா மதிப்புள்ள இந்த 3வது மிகப்பெரிய வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.