ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக நகரசபை தலைவர்கள் உட்பட பல உறுப்பினர்கள் தமது பதவியை இழந்துள்ளனர்.
அதாவது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெற்றதன் காரணமாக அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.தே.க. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதன் காரணமாக,
குறித்த உள்ளுராட்சி மன்ற ஆசனத்தை விட்டு அவர்களே விலகுவதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாவலபிட்டி நகர சபைத் தலைவர் சசங்க சம்பத் சஞ்சீவ, வெலிகம நகர சபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம,தங்காலை நகர சபைத் தலைவர் ரவிந்து தில்ஷன் வேதஆரச்சி ஆகிய நகர சபைத் தலைவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இது மாத்திரமன்றி கொழும்பு, கடுவலை, ஜா-எல மாநகர சபை உறுப்பினர்கள் மூவர் தங்களது ஆசனத்தை இழந்துள்ளனர்.
மற்றும் மாவனல்லை, கொத்மலை, நுவரெலியா, வலப்பனை, கருவலகஸ்வெவ, கெபித்திகொல்லாவை, எஹலியகொட, கலவானை, கொலன்ன, மஹவ, ஆனமடுவ, ஊவ மடுல்ல, பரணகம, கற்பிட்டி, சிலாபம், தலாவை, திறப்பனை, பலாகல, அம்பலாங்கொடை, அம்பகமுவ, பிபிலை, வரக்காபொல, பாணந்துறை, வலிகாமம் வடக்கு, வவுனியா தெற்கு, நுவரகம்பலாத்த, பண்டாரகம, மில்லனிய, நவகத்தேகம, பிங்கிரிய, குருணாகல், ரிதீகம, வத்தளை, திவுலபிட்டிய, களனி, பெலியத்த, நியகாம, போபெ - போத்தல, கலிகமுவ, ரம்புக்கன
பிரதேச சபை உறுப்பினர்களும் தங்களது ஆசனத்தை இழந்துள்ளனர்.
ஐ.தே.க. யின் அதிரடி: நகர சபைத் தலைவர்கள் உட்பட பலர் பதவி இழப்பு!
Reviewed by irumbuthirai
on
June 17, 2021
Rating:
No comments: