தான் ஏன் பாராளுமன்றம் செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனக்கு பாராளுமன்றம் செல்லும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் பாராளுமன்றம் செல்லுமாறு பலரும் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு காரணம் இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான முறையான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. எதிர்பார்த்ததைவிட மரணங்கள் அதிகரிக்கின்றன. இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் இதற்காக
குரல் எழுப்பும் தேவை இருப்பதாக நான் உணர்ந்தேன்.
மற்றுமொரு காரணம் மிக வேகமாக அரசாங்கத்தின் செல்வாக்கு மக்களிடையே குறைந்து வருகிறது. இதற்குரிய மாற்றீடுகளோ பொருத்தமான திட்டங்களோ எதிர்க்கட்சியிடம் இல்லை. எனவே நான் பாராளுமன்றம் சென்றால் அங்கிருந்து எனது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கலாம் என்று கூறினார்.
நான் ஏன் பாராளுமன்றம் வருகிறேன்? ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கம்!
Reviewed by irumbuthirai
on
June 20, 2021
Rating:
No comments: