ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி?


ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் உச்சபட்சமான 4 ஆண்டுகளுடன் கூடிய தொடர்ச்சியான இரு பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட்டில் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் திகதி நடந்தது. 
இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே காணப்பட்டது. அதாவது 2017 ஜனாதிபதித் தேர்தலில் 70% க்கும் அதிகமான வாக்குப்பதிவு இருந்த நிலையில் இம்முறை 60 வீதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டுள்ளது. 
இம்முறை தேர்தலில் போட்டியிட 40 பெண்கள் உள்ளிட்ட 592 பேர் பதிவு செய்திருந்த நிலையில், ஈரான் பாதுகாவலர் சபையினால் அப்பதவிக்கு போட்டியிட 7 ஆண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 
இதில் அந்நாட்டு உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி 
இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 60 வயதான இவர் அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர், 'ஏழைகளின் நாயகன்' என, 60 வயதான இப்ராஹிம் ரைசி புகழப்படுகிறார். 
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை மக்கள் முன்னிலையில் கூறி, அவர்கள் எந்த வித ஊழலில் ஈடுபட்டார்கள் என்று வெளிப்படையாக மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இந்த இப்ராஹிம் ரைசி.
ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி? ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி? Reviewed by irumbuthirai on June 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.