இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்


ஈ - தக்சலாவ (e-thakshalawa) வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (Learning Management System - L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் (Online) கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. 
 உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்படும். 
 Online முறையின் கீழ் கிராமப்புற பாடசாலைகளின் மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன், வீடியோ (காணொலி) தொழில்நுட்பத்தின் கீழ் ஒன்லைன் கல்வியை இலவசமாக வழங்கும் திட்டமும் ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மாதத்திலிருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம் இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம் Reviewed by irumbuthirai on June 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.