ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 16 தொலைக்காட்சி அலைவரிசைகள்:


கடந்த செவ்வாய்க்கிழமை (6) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பாராளுமன்றத்தில் தொலைக் கல்வி முறை தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றிய கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 
நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை பிரதானிகளுடன் கலந்துரையாடினோம். 
இதன் காரணமாக செனல் ஐ (Channel Eye) ஊடாக தற்போது கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அவை நடைபெறுகின்றன. 
தேசிய அலைவரிசைகளில் நஷ்டத்துடனும் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
இதேவேளை தற்போது கொழும்பில் சகல பாடசாலைகளின் 
அதிபர்களையும் அழைத்து கலந்துரையாடல் நடத்தப்படுகின்றது. 
அதனடிப்படையில் 16 அலைவரிசைகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு அலைவரிசை என்ற ரீதியில் செய்மதி முறையில் அந்த அலைவரிசைகள் தயாரிக்கப்படவுள்ளன. 
காலை 7.30 மணி - பி.ப 1.30 மணி வரையில் பாடசாலையில் கற்பிப்பதை போன்றே அது நடக்கும். 
இந்த கொவிட்19 நிலைமை எப்போது முடியுமென்று தெரியாது. இதனால் நாங்கள் மாணவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். 
இதேவேளை தனியார் தொலைக்காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பிய நாடகங்கள், படங்களை மீள ஒளிபரப்புவதை நிறுத்தி அதனை கல்விக்காக ஒதுக்கலாம். அல்லது மாணவர்களுக்கான உடற்பயிற்சிக்காக அரை மணி நேரத்தை ஒதுக்கலாம் என்றும் கேட்கின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.
Source: தினகரன்.
ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 16 தொலைக்காட்சி அலைவரிசைகள்: ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 16 தொலைக்காட்சி அலைவரிசைகள்: Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.