சமூகத்தில் ஒழுக்கத்தை பேணுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பயிற்சி வழங்கப்படுவது இளைஞர்களை படைவீரர்களாக்கும் நடவடிக்கையில்லை. சமூகத்தில் ஒழுக்கத்தை பேணுவதற்கு அது உதவும். சந்தேகம் அல்லது
அச்சமின்றி வாழவேண்டுமென்றால் சமூகத்தில் மோசடிக்காரர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் இல்லாத நிலையேற்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவப் பயிற்சி தொடர்பான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்த வேளை தன்னை கடுமையாக விமர்சித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் பயிற்சி:
Reviewed by irumbuthirai
on
July 16, 2021
Rating:

No comments: