தொழில் சந்தையை இலக்காகக் கொண்ட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பெருநகரப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
இதன் முதலாவது பல்கலைக்கழகம், கேகாலை மாவட்டத்தின் பின்னவல பகுதியை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகளை
அடுத்த சில வாரங்களில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை ஓர் எண்ணக்கருவாக அறிமுகப்படுத்தும் வகையில், அதற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.cu.ac.lk), “2021 - உலக இளைஞர் திறன் தினம்” கொண்டாடப்படும் திமான ஜுலை 15 (நேற்று) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யினால், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமானது பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம்: முதலாவது பல்கலைக்கழகம் கேகாலையில்:
Reviewed by irumbuthirai
on
July 16, 2021
Rating:

No comments: