2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதன்முதல் கண்டறியப்பட்டது. பின்னர் மெல்லமெல்ல ஒவ்வொரு நாடாக கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது.
இந்நிலையில் வுஹான் மாநிலத்தில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த இந்திய கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மாணவி விடுமுறைக்காக நாடு திரும்பினார். அப்போது அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
முதன் நபராக கண்டறியப்பட்டார். பின்னர் 03 வார சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் அந்த மாணவி படிப்பு விடயமாக டெல்லிக்கு செல்ல தயாராகியுள்ளார். இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அன்டிஜென் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால் PCR சோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதன் காரணமாக ஒன்றரை வருடங்களுக்குப்பின் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை. அந்த மாணவி தற்போது அவரது வீட்டில் நலமாக உள்ளார் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா!
Reviewed by irumbuthirai
on
July 16, 2021
Rating:
No comments: