முல்லைத்தீவு கோப்பாப்புலவு வான்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும் நேற்று (16) மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8ஆம் திகதி போராட்டம் நடத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிபர் ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக சேர்ந்து இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு உட்பட
பல்வேறு போராட்டங்களையும் பல இடங்களில் செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து 8 நாட்களின் பின்னர் அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 7ஆம் திகதி பொறியியல் கூட்டுத்தாபனம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் பள்ளேகள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட 6 பேரும்
நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றம் பிணை வழங்க இருந்த நிலையிலும் அவர்கள் போலீசாரால் பலவந்தமாக சட்டத்திற்கு முரணான விதத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்து அவர்கள் அனைவருக்கும் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோசப் ஸ்டாலின் உட்பட சகலரும் விடுவிப்பு: நடந்தது இதுதான்!
Reviewed by irumbuthirai
on
July 17, 2021
Rating:

No comments: